Monday, September 20, 2010

பாரதியின் கனவுப் பெண்


சென்னையில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி முடிவு அணி வகுப்பில் சென்னையைச் சேர்ந்த 21 வயதான திவ்யா அஜித் குமார் என்ற இளம் பெண் பயிற்சியில் முதலிடத்தைப் பெற்று இராணுவத் தளபதியிடம் இருந்து ஸ்வார்ட் ஆப் ஹானர் என்று அழைக்கப்படும் வாளை பெற்றுள்ளார்.
இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படும் ஆண்களும் பெண்களும் சுமார் ஓராண்டு காலத்துக்கு பல விதமான பயிற்சிகளை முடித்த பிறகு அவர்கள் ஒட்டு மொத்தமாக எடுத்த மதிப் பெண் அடிப்படையில் சிறந்த மாணவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படி தேர்வாகும் முதல் பெண் என்ற கெளரவத்தை திவ்யா அஜித் குமார் பெற்றுள்ளார்.
பயிற்சி அதிகாரிகள் இராணுவ வரலாறு, ஆயுதப் பயிற்சி, ஓட்டம், குறி சுட்டல் போன்ற பல பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்றும் அனைத்திலும் அவர்கள் பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் திவ்யா அஜித் குமார் முதலிடம் பிடித்ததாக அதிகாரிகள் பயிற்சி மையத்தின் பேச்சாளர் மேஜர் ஆர் கே சவுத்திரி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பல தசாப்தங்களாக பெண்கள் பணியாற்றி வந்தாலும், பிற பரிவுகளில் பெண்கள் அதிகாரிகளாக 1992 ஆம் ஆண்டி முதல்தான் சேர்க்கப்பட்டு வருகின்றனர். முதலில் பெண்கள் குறுகிய காலத்தில் பணியாற்ற மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்திரவுக்குப் பிறகு இராணுவம் பெண்களுக்கு ஆண்களைப் போல நிரந்தர பணி அதாவது கமிஷன் வழங்க ஒப்புக் கொண்டது.. இருந்தும் கலாட்படை, டாங்கிப் படை போன்ற நேரடிக் கள மோதல் பிரிவுகளில் பணிபுரிய அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பொறியியல் பிரிவு, கல்விப் பிரிவு, இராணுவ உளவுப் பிரிவு போன்றவற்றில் தான் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment