Monday, September 20, 2010

பொட்டி வந்துருச்சுசு !!!


தமிழ் சினிமாவில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இயக்குனர் பட்டியலில் இவருக்கு முக்கிய பங்குண்டு.இவருடைய ஆண்பாவம் திரைப்படத்தை பார்த்தவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திட முடியாது .அதில் குறிப்பாக V.K.ராமசாமி படத்தின் துவக்கத்தில் சொல்வார்..."எல்லாருக்கும் வணக்கம்.நான் ஒரு கோவில கட்டுனேன் ,யாரும் சாமி கும்பிட வரல .பள்ளிக்கூடத்தை கட்டுனேன் ,நீங்க யாரும் படிக்க வரல .குளத்த வெட்டுனேன் ,நீங்க யாரும் குளிக்க வரல .ஆனா சினிமா கொட்டகைய கட்டுனேன் ,கொட்டு ,மேளத்தோடு வரவேற்குறீங்க .இத பார்க்கும் போது என் அறிவுக்கு இந்த யோசனை ஏன் இவ்வளவு நாளா எட்டலன்னு வருத்தபடுறேன் .அதே நேரத்துல உங்க அறிவுக்கு இவ்வளவு சிக்கிரம் எட்டிருசேனு"
சந்தோஷ படுறேனு ஒரு வசனம் பேசுவார்.

அந்த படத்த டைரக்ட் பண்ணினது பாண்டியராஜன்.யாருடா அந்த பாண்டிய ராஜன் அப்படின்னு தெரிஞ்சுக்கவும் ,அவரோட நகைச்சவை பத்தி தெரிஞ்சுக்கவும் அவரோட பதிவுகள்
இந்த லிங்கில் இருக்கிறது

http://www.lakshmansruthi.com/pandiarajan/thedal-index.asp

"முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகள் தான் நம் தினசரி எதிரி. எதிர்பார்ப்பு இல்லையென்றால் நம் சந்தோஷப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிரச்சினையின் அளவை வைத்துதான் வெற்றி! வெற்றி பெரிதாக வரவேண்டுமென்று ஆசைப்படும் நாம்...பிரச்சினை சிறியதாக இருந்தாலே சங்கடப் படுவது எந்தவிதத்தில் நியாயம்© பிரச்சினை இல்லாத மனிதன் இறந்தவன் ஆகிறான். நாம் அதற்காகவா ஆசைப்படுகிறோம் ! "

இவை இயக்குனர் பாண்டியராஜன் தனது
தூக்கம் வராதபோது சிந்தித்தவை நூலில் குறிப்பிட்டது

No comments:

Post a Comment