நான் படித்த,பார்த்த,பாதித்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்...நம்முடைய வெட்டி பொழுதுகள்... பிடிக்கலைன்னா போய் வேலை வெட்டி இருந்தா பாருங்க!!!
Friday, January 7, 2011
யாரை நம்பி அடுத்த தலைமுறை ? கலாம்
நம் ஒவ்வொரு செயலும் தனிமனித முன்னேற்றம் மட்டும் அல்லாது நம் தேசத்தின் முன்னேற்றம்.அந்த வகையில் நம்மில் பலரின் முன்னோடியான டாக்டர்
அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முயல்வது நம் நாட்டின் வளர்ச்சிக்கு நம்மை கொண்டு சொல்லும்.
நேற்று ஒரு தனியார் நிர்வாக மேலாண்மை நிறுவன ஆண்டு விழாவில் பேசிய கலாம் "திறமை, உயர் தொழில்நுட்பப் பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் அடுத்த தலைமுறை தொழில் முனைவோரை இந்தியா எதிர்நோக்கி உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்
நேற்று ஒரு தனியார் நிர்வாக மேலாண்மை நிறுவன ஆண்டு விழாவில் பேசிய கலாம் "திறமை, உயர் தொழில்நுட்பப் பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் அடுத்த தலைமுறை தொழில் முனைவோரை இந்தியா எதிர்நோக்கி உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்
இந்தியா இயற்கை வளத்தை மட்டும் அல்லாமல் மகப் பெரிய மனித வளத்தையும் பெற்றுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு 30 லட்சம் பேர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளி வருகின்றனர்.
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு வேலைதேடுவோர் 70 லட்சம் பேர்.
இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு கோடி மாணவர்கள் வேலை தேடுகின்றனர். இருந்தபோதும் போதிய திறன் பெற்ற பணியாளர் கிடைப்பது தொடர்ந்து மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த இடைவெளியைப் போக்க கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். கலந்துரையாடல் முறையில் சுயமாக கற்றுக் கொள்ளுதல், சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் கல்விமுறை மாற்றப்பட வேண்டும்.
அப்போதுதான் படித்து முடித்து வெளிவரும் இளஞர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற்ற முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல பகிர்வு
எனது வலைப்பூவில் இணைந்தமைக்கு நன்றி... நீண்ட நாட்களாக பதிவுகள் போடாமல் இருக்கிங்களே ஏன்?
Post a Comment